காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்: எஸ்.பி.க்கு பொதுமக்கள் கோரிக்கை
By DIN | Published On : 21st April 2019 12:59 AM | Last Updated : 21st April 2019 12:59 AM | அ+அ அ- |

நீடாமங்கலம் காவல் ஆய்வாளர் முனிசேகரை பணியிட மாற்றம் செய்யக் கூடாது என மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு பொதுமக்கள் சமூக வலைதளம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீடாமங்கலம் காவல் ஆய்வாளர் முனிசேகர் நிர்வாகக் காரணங்களுக்காக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இதனால், அவர் பணியிட மாற்றம் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. முனிசேகர் பொறுப்பேற்ற நாளிலிருந்து நீடாமங்கலத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை கட்டுக்குள் வந்திருப்பதாகவும், அவரை பணியிட மாற்றம் செய்யும் முடிவைக் கைவிட வேண்டுமென கோரியும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்பட உயர் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளனர்.