ரயில்வே சட்டத்தில் திருத்தங்கள்: தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் வலியுறுத்தல்
By DIN | Published On : 26th April 2019 01:20 AM | Last Updated : 26th April 2019 01:20 AM | அ+அ அ- |

புராதன கட்டடங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, ரயில்வே சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் வெளியிட்ட அறிக்கை:
இந்திய ரயில்வே 166 ஆண்டுகள் பழைமைவாய்ந்தது. யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட மும்பை ரயில் நிலையத்துக்கு "சத்ரபதி சிவாஜி' ரயில் நிலையம் என பெயர் சூட்டப்பட்டது. உலகத் தரத்துக்கு மாற்றும் அளவில், பல புராதன ரயில் நிலையங்கள் உள்ளன. சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் புராதன சின்னமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட தகுதியுடையவை. எனவே, புராதன கட்டடங்களைப் பாதுகாக்க ரயில்வே சட்டத்தில் திருத்தங்கள் தேவை என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.