முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
இந்திய நிறுவனத்திடமே தண்டவாளங்கள் கொள்முதல் செய்ய வேண்டும்: தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் வலியுறுத்தல்
By DIN | Published On : 04th August 2019 01:01 AM | Last Updated : 04th August 2019 01:01 AM | அ+அ அ- |

ரயில்வேயில் புதிய பாதை மற்றும் பழைய பாதைகளை மாற்றத் தேவையான தண்டவாளங்களை வழக்கம்போல் இந்திய பொதுத்துறை நிறுவனத்திடமிருந்தே கொள்முதல் செய்ய வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் ரயில்வே வாரியத்தை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அதன் துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் வெளியிட்ட அறிக்கை:
நிகழ் நிதியாண்டில் 4 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு ரயில் தண்டவாளங்கள் புதுப்பிக்கப்படவுள்ளன. இதற்கு பட்ஜெட்டில் ரூ.10,120 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய பாதைகள் அமைக்கவும், புதுப்பிக்கவும் தேவைப்படும் தண்டவாளங்களை பொதுத்துறை நிறுவனமான இந்திய ஸ்டீல் அத்தாரிட்டி (செயில்) நிறுவனத்துடன் 2003-ஆம் ஆண்டு வாரியம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாங்கி வருகிறது.
ஆனால், நிகழாண்டு புதிய தண்டவாளங்கள் வாங்க உலகளாவிய ஏல அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது. இதன்மூலம் தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் தண்டவாளங்கள் கொள்முதல் செய்வது அரசுக்கு கூடுதல் செலவீனம். எனவே, செயில் உற்பத்தி திறன் அதிகரிக்க அந்நிறுவனத்திடமே தண்டவாளங்கள் கொள்முதல் செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.