முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
வரதராஜப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
By DIN | Published On : 04th August 2019 01:04 AM | Last Updated : 04th August 2019 01:04 AM | அ+அ அ- |

திருத்துறைப்பூண்டி அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி, திருக்கல்யாணம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, நீலாதேவிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மாலையில் கோயில் மண்டபத்துக்கு பக்தர்கள் சீர் வரிசை எடுத்து வந்தனர். தொடர்ந்து, திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் மாலை மாற்றுதல், ஊஞ்சல் உத்ஸவம் நடைபெற்றது.
இதில், கோயில் செயல் அலுவலர் எம். முருகையன், கணக்கர் ஐயப்பன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மலர் வணிகர் மற்றும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் காளிதாஸ், செயலாளர் சாமிநாதன், பொருளாளர் சாமிநாதன், துணைத் தலைவர் குமார், உள்ளிட்டோர் செய்திருந்தனர் .