முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரிபிரதமருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்
By DIN | Published On : 04th August 2019 01:02 AM | Last Updated : 04th August 2019 01:02 AM | அ+அ அ- |

முத்துப்பேட்டையை அடுத்த எடையூர் சங்கேந்தியில் இளைஞர் பெருமன்றம் சார்பில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, பிரதமருக்கு அஞ்சல் அட்டைகள் அனுப்பும் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
எடையூர் சங்கந்தி கடைவீதியில் உள்ள தபால் பெட்டி முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு இளைஞர் பெருமன்ற ஒன்றியத் தலைவர் விக்னேஷ் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
மாவட்டச் செயலாளர் துரை அருள்ராஜன், மாவட்டத் தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர் ஹைட்ரோகார்பன் திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்துப் பேசினர்.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே. முருகையன் பங்கேற்று அஞ்சல் அட்டைகள் அனுப்புவதைத் தொடங்கிவைத்தார்.
இப்போராட்டத்தில், ஒன்றியக்குழு முன்னாள் துணைத் தலைவர் என். தெட்சிணாமூர்த்தி, கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளர் குணசேகரன், நிர்வாகிகள் உமேஷ்பாபு, குமார், சிவச்சந்திரன், சரவணன், பரமசிவம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.