மன்னார்குடி கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டம்

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி, உள்பிராகார தேரோட்டம்

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி, உள்பிராகார தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் தனி சன்னிதியில் அருள்பாலிக்கும் படிதாண்டா பத்தினி செங்கமலத்தாயாருக்கு ஆண்டுதோறும் ஆடிப்பூரத் திருவிழா 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான இவ்விழா ஜூலை 27- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. 
விழாவில், தினமும் செங்கமலத்தாயாருக்கு வெவ்வேறு அலங்காரம் செய்யப்பட்டு, விசேஷ பூஜைகள் நடைபெற்றன. 
விழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பூரத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை கோயிலின் உள்பிராகாரத்தில் நடைபெற்றது. இதற்காக 36அடி உயரமும், 22 அடி சுற்றளவும், 30 டன் எடையும் கொண்ட அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் செங்கமலத்தாயார் காலையில் எழுந்தருளினார். தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பின்னர், மாலையில் தேரோட்டத்தை, தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ், அவரது மனைவி லதா மகேஸ்வரி மற்றும் குடும்பத்தினருடன் பங்கேற்று, தேரின் வடம் பிடித்து, தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
 தொடர்ந்து, பக்தர்கள், ஆன்மிக ஆர்வலர்கள், தேசியப்பள்ளி மாணவர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.  
இதற்கான ஏற்பாடுகளை, கோயில் செயல் அலுவலர் சங்கீதா உள்ளிட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com