சுடச்சுட

  

  ஆளுநர் மாளிகையில் சுதந்திர தின வரவேற்பு: அரசுப் பள்ளி ஆசிரியர் பங்கேற்கிறார்

  By DIN  |   Published on : 15th August 2019 09:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் சுதந்திர தின வரவேற்பு விழாவில் தென்குவளவேலி அரசுப் பள்ளி ஆசிரியர் பங்கேற்கிறார்.  
  திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஒன்றியம், தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருபவர் சூரியகுமார். மாணவர்களின் தனித்திறமையை கண்டறிந்து ஊக்குவிப்பது, மாணவர்களுக்கு வாழ்க்கைக்குப் பயனுள்ள களப் பயணங்களை மேற்கொள்வது, மாணவர்களிடம் அறிவியல் சிந்தனையை ஊக்குவிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருபவர். இவரது ஆசிரியர் பணி சேவையை கெளரவிக்கும் வகையில் ஆளுநர் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள சுதந்திர தின வரவேற்பு விழாவில் கலந்துகொள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அழைப்பு விடுத்துள்ளார்.
  அழைப்பின்பேரில், ஆளுநர் மாளிகையில் (ராஜ்பவன்)  நடைபெறும் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ளும் ஆசிரியர் சூரியகுமாருக்கு பள்ளித் தலைமையாசிரியர் ஐரன்பிரபா மற்றும் ஆசிரியர்கள் ராமமூர்த்தி, இளையராஜா, விஜயகுமாரி, ரேணுகா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai