சுடச்சுட

  

  எம்.கே. தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம்: விஸ்வகர்மா சங்கம் வரவேற்பு

  By DIN  |   Published on : 15th August 2019 09:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மன்னார்குடியில் அண்மையில் நடைபெற்ற, மன்னார்குடி நகர, வட்ட விஸ்வகர்மா 5 வகுப்பு சமூக மகாஜன பொதுக் குழுக் கூட்டத்தில், எம்.கே. தியாகராஜ பாகவதருக்கு மணிமண்டபம் அமைப்பதற்கு தமிழக அரசின் உத்தரவை வரவேற்று நன்றி தெரிவிக்கப்பட்டது.
  கூட்டத்துக்கு, தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். 
   மன்னார்குடி நகரமன்ற முன்னாள் தலைவர் வி.எஸ். ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். திரைப்படத் துறையிலும், இசைத் துறையிலும் சாதனைப் படைத்த எம்.கே. தியாகராஜ பாகவதருக்கு தமிழக அரசின் சார்பில் மணிமண்டபம்  அமைப்பதற்கு விதி எண் 110-ன் கீழ் உத்தரவு பிறப்பித்திருப்பதை வரவேற்பதுடன், இதற்கு காரணமாக இருந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு நன்றி  தெரிவிக்கப்பட்டது. 
  புதிய நிர்வாகிகள்: வட்ட சங்கத் தலைவராக மனோகரன், பொதுச் செயலராக கோபி, பொருளாளராக கோவிந்தராஜ் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai