சுடச்சுட

  

  சிறுபுலியூர் கிருபாசமுத்திரப் பெருமாள் கோயிலில் புதன்கிழமை 108 கலச பூஜை நடைபெற்றது. 
  நன்னிலம் அருகேயுள்ள சிறுபுலியூர் கிருபாசமுத்திர பெருமாள் கோயிலில் ஆடி மாத சிறப்பு உத்ஸவமாக, ஆடி மாத பிறப்பு சிறப்பு அபிஷேக ஆராதனை, ஆடிப் பெருக்கு தீர்த்தவாரி, தினசரி திருப்பவித்ரோத்ஸவம், ஹோமங்கள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, ஆகஸ்ட் 10-ஆம் தேதி சனிக்கிழமை ஜேஷ்டாபிஷேக திருமஞ்சனம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, புதன்கிழமை திருமஞ்சனம், ஹோமம், 108 கலச திருமஞ்சனம் மற்றும் கவசம் சாற்றுதல் நடைபெற்றது. நிகழ்ச்சியைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை (ஆக.16) ஆடி கடை  வெள்ளியையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறவுள்ளன. வருடத்தில் இந்த 5 நாள்கள் மட்டும் தான் கிருபாஸமுத்திர பெருமாளுக்கு கவசம் கலைந்து திருமஞ்சனம் நடைபெறும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai