சுடச்சுட

  

  "குடிமராமத்து பணிகளில் குறை இருந்தால் ஸ்டாலின் ஆய்வு நடத்துவார்'

  By DIN  |   Published on : 15th August 2019 09:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குடிமராமத்து பணிகளில் குறைபாடுகள் இருந்தால், ஸ்டாலின் விவசாயிகளை சந்தித்து ஆய்வு  நடத்துவார் என திமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
  திருவாரூரில் திமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள் பூண்டி கே. கலைவாணன் (திருவாரூர்), டி.ஆர்.பி. ராஜா (மன்னார்குடி), ஆடலரசன் (திருத்துறைப்பூண்டி) ஆகியோர் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு கூட்டாக அளித்த பேட்டி: மேட்டூர் அணை 100 அடியை எட்டியதால் தண்ணீர் திறந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டு, தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
  ஆனால் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்றுதான் தண்ணீர் திறந்து விடப்படுவதாக, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நாடகம் ஆடுகிறார். மேலும், ஆளும் கட்சியினருக்கு பணம் தருவதற்காகவே குடிமராமத்து எனும் திட்டத்தை தொடங்கி அதன்மூலம் தொகை வழங்கப்படுகிறது. தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், குடிமராமத்து பணிகளை முடித்து விட்டு, இனி தொடங்க வேண்டிய பணிகளை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குடிமராத்து பணிகள் சரிவர நடைபெறுகிறதா என திமுகவினர் கண்காணிக்க வேண்டும் என்றும், இப்பணிகளில் எதுவும் குறைபாடுகள் இருந்தால், தான் நேரடியாக வந்து விவசாயிகளிடம் குறைகளை கேட்கும் நிலை ஏற்படும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
  என்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai