சுடச்சுட

  

  கூத்தாநல்லூர் சாலைகளில் ஊசிக் கோபுர விளக்குகள் அமைக்க வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 15th August 2019 09:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கூத்தாநல்லூர் பகுதியில் பிரதான சாலைகளில் ஊசிக் கோபுர விளக்குகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 
  இதுகுறித்து, திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர்  அப்துல் அலீம் கூறியது: கூத்தாநல்லூர் நகராட்சி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தாலுகாவாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, ஓராண்டுக்குப் பிறகுதான் தாலுகாவாக செயல்படத் தொடங்கியது.
  சின்ன சிங்கப்பூர் என்ற பெயர் மட்டும்தான் உள்ளது. அதற்கேற்றபடி தெரு விளக்குகள் அமைக்க வில்லை. லெட்சுமாங்குடி பாலம் அருகே ஊசிக்கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.
  இதேபோல், கூத்தாநல்லூர் பெரியப்பள்ளி வாயில், வடபாதிமங்கலம், பழையனூர், தென்கோவனூர், வடகோவனூர், பண்டுதக்குடி உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்வதற்காக பயணிகள் நிற்கக் கூடிய இடமான பாய்க்காரப்பாலம், புதிய நகராட்சி அருகேயுள்ள பழுதடைந்த புதிய பேருந்து நிலையம், திருவாரூர் - மன்னார்குடி பிரதான சாலை உள்ளிட்ட இடங்களில், ஊசிக் கோபுர  விளக்குகள் அமைக்க வேண்டும்.
  மேலும், லெட்சுமாங்குடி பாலத்திலிருந்து திருவாரூர் - மன்னார்குடி பிரதான சாலை, வடபாதிமங்கலம் - கொரடாச்சேரி பிரதானச் சாலை உள்ளிட்ட 4 சாலைகளில் வேகத்தடை அமைக்க வேண்டும். லெட்சுமாங்குடி பாலம் ,இந்தியன் வங்கி, அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai