சுடச்சுட

  

  நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோயிலில் 19-ஆம் ஆண்டு 1008 திருவிளக்கு பூஜை செவ்வாய்க்கிழமை அதிவிமரிசையாக நடைபெற்றது.
  நால்வர்களில் ஒருவரான திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற இக்கோயிலில், சாமுண்டீஸ்வரி அம்மன் தனிச் சன்னிதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.
  சிறப்பு பெற்ற இக்கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு 19-ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜையும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு மஞ்சள்காப்பு அலங்காரமும் செய்யப்பட்டது.
  முன்னதாக கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்கவல்லபநாதர், சாமுண்டீஸ்வரி அம்மன் உள்ளிட்ட அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai