சுடச்சுட

  

  திருத்துறைப்பூண்டி அருகே வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்துச் சென்றது புதன்கிழமை தெரியவந்தது. 
  திருத்துறைப்பூண்டி - நாகை கிழக்கு கடற்கரை சாலை பாமணி சுந்தரபுரியில் வசித்து வருபவர் ரைகானா பர்வீன். இவர் திங்கள்கிழமை பக்ரீத் பண்டிகை என்பதால் அருகிலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.
  இதையடுத்து, புதன்கிழமை வீட்டுக்கு சென்று பார்த்தபோது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 7 பவுன் மற்றும் ரூ. 13 ரொக்கம், 2 எரிவாயு உருளை ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, தகவலறிந்த டிஎஸ்பி இனிக்கோதிவ்யன், ஆய்வாளர் அன்பழகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். தவிர, தடயவியல் நிபுணர்கள் தடயங்களை
  பதிவு செய்தனர்.
  மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai