கல்வி நிறுவனங்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில் சுதந்திர தினக் கொண்டாட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளில்  வியாழக்கிழமை 73- ஆவது சுதந்திர தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளில்  வியாழக்கிழமை 73- ஆவது சுதந்திர தின விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
திருவாரூர் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் எஸ். வெங்கடேசன் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றினார். இதில் பள்ளித் தாளாளர் சந்திரா முருகப்பன், பள்ளி நிர்வாக அறங்காவலர் ஜி. முருகப்பன், செயலர் எம். இன்பராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
புலிவலம் கஸ்தூர்பா காந்தி நர்சரி பிரைமரி பள்ளி, புனவாசல் கமலாபுரம் கஸ்தூர்பா காந்தி நர்சரி பிரைமரி பள்ளி, முடிகொண்டான் ஒருங்கிணைந்த உயர்நிலைப்பள்ளியிலும் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருவாரூர் சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உதவிப் பேராசிரியர் அன்சாரி, சென்ட்ரல் வங்கி மேலாளர் சகாய சினேகா அபிஷா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் லட்சுமி அசோக், நிர்வாக அலுவலர் கோடீஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஸ்ரீ மீனாட்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் டி.ஆர். பிரபாவதி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தாளாளர் ரமணி முன்னிலை வகித்தார்.    
திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நேதாஜி கல்விக் குழுமத் தலைவர் சு. வெங்கடராஜலு தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். கலைக் கல்லூரி முதல்வர் சேதுராமன் முன்னிலை ஏற்றார். நேதாஜி மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், கல்லூரி மாணவிகளின் பல்சுவை நிகழ்வுகளும் நடை பெற்றன. நிகழ்ச்சியில் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் கலைமகள், கலைக் கல்லூரி துணை முதல்வர் இரா.அறிவழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வேலுடையார் கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.எஸ்.எஸ். தியாகபாரி தலைமை வகித்தார். கல்விக்குழு உறுப்பினர்  கே. ஜீ. சீலர் முன்னிலை வகித்தார். திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறைத் தலைவர் வேல்முருகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமை ஆசிரியர் சு. தி. சுந்தர், முதுகலைத் தமிழாசிரியர் கோமல் தமிழமுதன் உள்பட பலர் பங்கேற்றனர்.
அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தலைமை ஆசிரியர் முருகபூபதி தலைமை வகித்து, விடுதலைக்கு வித்திட்ட தலைவர்கள் குறித்து பேசினார். ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர் சங்கர் பங்கேற்று, அரசுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பணப் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சாதிக் அலி, பள்ளி வளர்ச்சிக் குழுத் தலைவர் புருகானுதீன், தொழிலதிபர் அசன் அலி, குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் தமிழ்க் காவலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குடவாசல் அருகே சேங்காலிபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா தலைமை வகித்தார். இதில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் வி. கோவிந்தராஜன், துணைத் தலைவர் அம்பிகாபதி, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் வியாழக்கிழமை சுதந்திர தினவிழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைப்பின் கெளரவத் தலைவர் ஸ்ரீதரன் தேசியக்கொடியை ஏற்றினார். இதில் அமைப்பின் தலைவர் ஜெ. கனகராஜன் உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் நகராட்சி ஊழியர் ரோஜாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு, பொன்னாடையும், பரிசும் வழங்கப்பட்டது.
கூத்தாநல்லூரில்...
கூத்தாநல்லூர் வட்டத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
கூத்தாநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மலர்கொடி, காவல் நிலையத்தில், சிறப்பு உதவி ஆய்வாளர் காமராஜ் முன்னிலையில், சிறப்பு உதவி ஆய்வாளர் நாகராஜன், நகராட்சியில் ஆ ணையர் ந. குமரன், தீயணைப்பு நிலையத்தில் செயல் அலுவலர் (பொ) ச. சிகேந்திரன், புள்ளமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், அதன் தலைவர் த. செல்வம் உள்ளிட்டோர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, இனிப்புகள் வழங்கினர்.
இதேபோல், டெல்டா பப்ளிக் பள்ளியில், பள்ளியின் அறங்காவலர் தாஜீதீன் தலைமையில், முதல்வர் ஜோஸ்பின் முன்னிலையில், அறங்காவலர் அபுபக்கர் சித்திக் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, யோகாவில் சாதனை படைத்தவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார். மன்ப உல் உலா மேல்நிலைப் பள்ளியில், கல்விக் குழுத் தலைவர் எல்.எம். முஹம்மது அஷ்ரப் தலைமையில்,சிறப்பு அழைப்பாளர் எல்.எம். நிஜாமுதீன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் தி.மு. தமீஜ்ஜூத்தீன், தலைமையாசிரியர் த. உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
லிட்டில் பிளவர் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் தாளாளர் பாலசுப்ரமணியன், மரக்கடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பெற்றோர், ஆசிரியர் கழகத் தலைவர் எம். சுப்ரமணியன், வி.எஸ்.டி. ஈஎஸ்ஏஆர் மெட்ரிக். பள்ளியில் தாளாளர் வெங்கடேசன் முன்னிலையில் வர்த்தக சங்கத் தலைவர் ரவிச்சந்திரன், வெற்றிக் கழகத்தில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் ஏ. சண்முகம், பொதக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமூக ஆர்வலர் எம்.ஈ. அப்துல்காதர் முன்னிலையில், தலைமையாசிரியர் ரா. ராஜலெட்சுமி ஆகியோர் தேசியக் கொடி ஏற்றி வைத்தனர்.
நன்னிலத்தில்...
நன்னிலம் வட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில்  சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
 நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தி.திருமால் தேசியக் கொடி ஏற்றினார். நிகழ்ச்சியில் அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் தெ. கருணாமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நன்னிலம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் ஜோ. விசித்திராமேரி கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். 
நன்னிலம் வட்டத்துக்குள்பட்ட நெம்மேலி கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் முன்னாள் ஆசிரியர் எஸ். ராமதாஸ்  தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் ந.செந்தமிழ் செல்வன் தலைமையில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜி.அய்யாதுரை, கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பள்ளி முதல்வர் தாமஸ் ஆகியோர் தேசியக் கொடியேற்றினர்.
குருங்குளம்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா, 2018-019- ஆம் கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்குப் பட்டமளிப்பு விழா, ஆண்டு விழா என முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் சி. மங்களசெல்வி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவாரூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சரவணன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் நன்னிலம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ம.கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பனங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் இரா. விமலா தலைமையில், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கணேசன், நன்னிலம் பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவு ஆய்வாளர் வே. நாகராஜன்,திருவாரூர்  சொரக்குடி ஆரூரான் பாலிடெக்னிக் கல்லூரியில்  கல்வி அறக்கட்டளைத் தலைவர் டீ. கண்ணன், பேரளம் ஸ்ரீ சங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் ஜி.வெற்றிசெல்வம் முன்னிலையில் காவல்துறை உதவி ஆய்வாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றிவைத்தனர்.
வண்டாம்பாளை  விவேகானந்தம் வித்யாஷேரம் பள்ளியில் தாளாளர் டி. ஜனகமலா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவாரூர் திரு.வி.க. கல்லூரி பேராசிரியை சி. தமிழ்ச்செல்வி தேசியக் கொடியேற்றினார்.
மன்னார்குடியில்...
மன்னார்குடியில் கல்வி நிலையங்கள், அரசுத் துறை அலுவலகங்கள், அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
 மன்னார்குடி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில், மாவட்டத் தலைவர் எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமையில், காந்தி, நேதாஜி, காமராஜர் ஆகியோரது உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்தனர். பின்னர், தேசியக் கொடி ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில், கட்சியின் நகரத் தலைவர் ஆர். கனகவேல், மாநில பொதுக் குழு உறுப்பினர் நெடுவை குணசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தமாகா சார்பில், நகரத் தலைவர் கே.எஸ். நடனபதி தலைமையில் தேசிய தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து, கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில், நகர்மன்ற முன்னாள் தலைவர் வி.எஸ். ராஜேந்திரன், நகர முன்னாள் தலைவர் எஸ். ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பாஜக சார்பில் மன்னார்குடி அப்துல்கலாம் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கட்சியின் நகரத் தலைவர் பால.பாஸ்கர் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலர் வி.கே.செல்வம் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். இதில், நகர பொதுச் செயலர் ஆர். ரகுராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மன்னார்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் எஸ். புண்ணியக்கோட்டி, வட்டாட்சியர் அலுவலகத்தில் என். கார்த்திக், காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம், காவல் நிலையத்தில் முறையே துணைக் கண்காணிப்பாளர் எஸ்.கார்த்திக், ஆய்வாளர் ஆர்.ராஜேந்திரன், மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் எஸ். சம்பத், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையர் ஞானம், நகராட்சி அலுவலகத்தில் ஆணையர் ஜி. இளங்கோவன், மன்னார்குடி நகர கூட்டுறவு வங்கியில் மேலாண்மை இயக்குநர் ஜெ. இளங்குமரன் தலைமையில் அதன் தலைவர் ஆர்.ஜி.குமார் ஆகியோர் தேசியக் கொடியைஏற்றிவைத்தனர்.
சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரியில் தாளாளர் வி.திவாகரன், மேலவாசல் சதாசிவம் கதிர்காமவள்ளி கல்வி நிறுவனத்தில் அதன் தலைவர் ஜி. சதாசிவம், பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் முதல்வர் விக்டோரியா, மன்னார்குடி ஸ்ரீபாரதிதாசன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பள்ளி முதல்வர் ஜெ. அசோகன் தலைமையில் முன்னாள் ராணுவவீரர் அருள்நிதி ஆர்.கைலாசம், எஸ்.பி.ஏ.மெரிக்.மேல்நிலைப் பள்ளியில் நிர்வாகி ஆர்.அனிதா தலைமையில் தாளாளர் பி.ராமேஷ், தரணி மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் விஜயலெட்சுமி காமராஜ் தலைமையில், நிர்வாகி எம்.இளையராஜா முன்னிலையில், முன்னாள் ராணுவ வீரர் ஜெகநாதன் ஆகியோர் மூவர்ண கொடியை ஏற்றினர்.
பின்லே மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் வசந்தி செல்வராணி தலைமையில் தாளாளர் ஜேம்ஸ் ரெல்டன், ஸ்ரீசண்முகா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் ஆர்.எஸ். செந்தில்குமார் தலைமையிலும் நிர்வாகி எஸ்.சண்முகராஜா முன்னிலையிலும் மன்னார்குடி ரோட்டரி சங்கத் தலைவர் கார்த்திகேயன், தேசிய மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் டி.எல்.ராதாகிருஷ்ணன் தலைமையில் தாளாளர் டி.பி.ராமநாத உடையார், அசோகா சிசுவிஹார் பள்ளியில் தாளாளர் வெங்கட்ராஜன், மேலமரவாக்காடு தேவி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் மதிகுணன், உள்ளிக்கோட்டை நவபாரத் மெரிக்.மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் சி.மலையரசன் ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றிவைத்தனர்.
நீடாமங்கலத்தில்...
நீடாமங்கலத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பி. ரோஸ்லின் தேசியக் கொடி ஏற்றினார்.
நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூடுதல் ஆணையர் தமிழ்ச்செல்வி முன்னிலையில் ஆணையர் வெற்றியழகன் தேசியக் கொடி ஏற்றினார். நீடாமங்கலம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் சுப்ரியா, பேரூராட்சி அலுவலகத்தில் தலைமை எழுத்தர் புஷ்பலதா ஆகியோர் தேசியக் கொடி ஏற்றினார்.
நீடாமங்கலம் செயின்ட் ஜூட்ஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் என்.கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளி தாளாளர் எஸ். நடராஜன், நிர்வாக இயக்குநர் எம். விக்னேஷ், மூத்த முதல்வர் என்.சுகுணவதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நீடாமங்கலம் செயின்ட்மேரீஸ் மெட்ரிக். பள்ளியில் தலைமையாசிரியை ஞானசவுந்தரி தலைமையில் ஓய்வுபெற்ற ஆசிரியர் கி. சேதுரத்தினம், நீடாமங்கலம் உதவும் மனங்கள் அறக்கட்டளை சார்பில் குளம் தென்கரையில் புரவலர் எல். ஜெயக்குமார் தலைமையில், ஓய்வுபெற்ற வன சரக அலுவலர் கே.ஆர். ராமச்சந்திரன், வர்த்தகர் சங்க அலுவலகத்தில் தலைவர் பி.ஜி.ஆர்.ராஜாராமன் தலைமையில் செயலாளர் வெங்கிட் ஆகியோர்  தேசியக் கொடியை ஏற்றிவைத்தனர்.
நீடாமங்கலம் நீலன் மெட்ரிக். மேல் நிலைப்பள்ளியில் முதல்வர் ஜி. புவனேஸ்வரி முன்னிலையில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர்  தெட்சிணாமூர்த்தி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com