காளியாகுடி கிராமத்தில் தண்ணீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தல்

கொல்லுமாங்குடி அருகேயுள்ள காளியாக்குடி ஊராட்சியில் நிலவும் தண்ணீர்ப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிவலியுறுத்தியுள்ளது. 

கொல்லுமாங்குடி அருகேயுள்ள காளியாக்குடி ஊராட்சியில் நிலவும் தண்ணீர்ப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிவலியுறுத்தியுள்ளது. 
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே காளியாகுடி ஊராட்சிக்குள்பட்ட சிக்கல்மன்மதன் கோயில் தெருவில் சுமார் 50 விவசாய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் தெருவில் குடிநீர்ப் பிரச்னை மிக கடுமையாக உள்ளது.  அனைத்து குடும்பத்துக்கும் இப்பகுதியில் ஒரே ஒரு குடிதண்ணீர் வழங்கும் கை பம்ப் மட்டுமே உள்ளது. இந்த கை பம்பை அனைவரும் பயன்படுத்துவதால் அவ்வப்போது பழுதாகி விடுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீருக்காக ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் சென்று குடிநீர் எடுத்து வர வேண்டிய ஒரு நிலை உள்ளது.
இதனால் இப்பகுதியில் சிறிய குடிதண்ணீர் டேங்க் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு ஆழ்துளை குழாய் போடப்பட்டது. ஆனால், அந்த ஆழ்துளை குழாய்க்கு மின் இணைப்பு வழங்கவில்லை. இதனால் போடப்பட்ட ஆழ்துளை குழாய் எவ்வித பயன்பாடும் இன்றி உள்ளது. இந்த ஆழ்துளை குழாய்க்காக கொண்டுவரப்பட்ட மின்மோட்டார் வேறு இடத்தில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி குடிநீர் வசதிக்காக போடப்பட்ட ஆழ்துளை குழாய் தூர்ந்து போய் உள்ளது. எனவே, காளியாகுடி ஊராட்சியைச் சார்ந்த சிக்கல் மன்மதன் கோயில் தெருவுக்கு உடனடியாக குடிநீர் குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என நன்னிலம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலர் டி. வீரபாண்டியன் உள்ளிட்ட பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com