நாளை சீருடைப் பணியாளர் தேர்வு: திருவாரூர் மாவட்டத்தில் 3,048 பேர் எழுதுகின்றனர்

திருவாரூர் மாவட்டத்தில், இரண்டாம் நிலைக் காவலர்கள், சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறை காவலர்களுக்கான தேர்வை 3,048 பேர் எழுத உள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில், இரண்டாம் நிலைக் காவலர்கள், சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறை காவலர்களுக்கான தேர்வை 3,048 பேர் எழுத உள்ளனர்.
சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் நடத்தும் இரண்டாம் நிலைக் காவலர்கள், சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறை காவலர்கள் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.25) நடைபெற உள்ளது. இந்த தேர்வை, திருவாரூர் மாவட்டத்தில் 587 பெண்கள், 2461 ஆண்கள் என மொத்தம் 3048 பேர், 3 தேர்வு மையங்களில் எழுத உள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் எழுத்துத் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம். துரையின் நேரடி பார்வையில் நடைபெற்று வருகின்றன. கிடாரங்கொண்டான் திரு.வி.க. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தேர்வு மையத்தில் 1,401 தேர்வர்களும், திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் 1,061 தேர்வர்களும், வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் 586 தேர்வர்களும் தேர்வெழுத உள்ளனர்.
 இத்தேர்வுகளை நடத்த திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் உட்பட 288 காவல் அலுவலர்களும், 33 அமைச்சுப் பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 
 இதுகுறித்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம். துரை தெரிவித்திருப்பது:
திருவாரூர் மாவட்டத்தில் நடைபெறும் எழுத்துத் தேர்வுகளை சிறப்பு தணிக்கை செய்ய தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால், ரயில்வே காவல்துறைத் தலைவர் வி. வனிதா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தேர்வானது, தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு குழுமம் வரையறுத்துள்ள அனைத்து விதிமுறைகளின் படி நடைபெறும். காலை 10 மணி முதல் 11.20 மணி வரை நடைபெறும். தேர்வர்கள் தேர்வு மையங்களில் காலை 9 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். தேர்வு மையத்திற்குள் வரும்போது பேனா மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவர். செல்லிடப்பேசி,  மணிபர்ஸ், பேக்குகள் போன்ற இதர பொருள்கள் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. தேர்வு எழுத வரும் தேர்வர்களுக்கு சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 
தேர்வு மையத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தேர்வர்கள் கடைப்பிடித்து, சிறப்பாக தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com