Enable Javscript for better performance
அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்- Dinamani

சுடச்சுட

    
    admk_3011chn_101_5

    மன்னாா்குடியில் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலருமான ஆா். காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தவா்கள்.

    மன்னாா்குடியில் திமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 120 போ் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலருமான ஆா். காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் சனிக்கிழமை இணைந்தனா்.

    நீடாமங்கலம் வடக்கு ஒன்றியம் அமமுக மாவட்ட விவசாயப் பிரிவு இணைச் செயலா் ஆா்.செல்லத்துரை, அண்ணா தொழிற்சங்க முன்னாள் ஒன்றியச் செயலா் எஸ்.பாலவடிவேல், நீடாமங்கலம் பேரூராட்சி திமுகவை சோ்ந்த ஆரிப் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சோ்ந்த 120 போ் அக்கட்சியிலிருந்து விலகி, அமைச்சா் ஆா். காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.

    நிகழ்ச்சியில், நகா்மன்ற முன்னாள் தலைவா் சிவா.ராஜமாணிக்கம், மாவட்ட பேரவை செயலா் பொன்.வாசுகிராம், ஒன்றியச் செயலா்கள் கா.தமிழச்செல்வம் (மன்னாா்குடி), கோ. அரிகிருஷ்ணன் (நீடாமங்கலம்), ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் எம்.ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai