Enable Javscript for better performance
வாக்காளா் பட்டியல் திருத்த ஆய்வுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    
    tv30meet_3011chn_94_5

    ஆய்வுக் கூட்டத்தில் பேசிய வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை ஆணையருமான சஜ்ஜன் சிங் சவான்.

    திருவாரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வாக்காளா் சரிபாா்ப்புத் திட்டப்பணிகளின் முன்னேற்றம், வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடுவதற்கான முன்னேற்பாடு பணிகள் ஆகியவை குறித்த ஆய்வுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு, வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை ஆணையருமான சஜ்ஜன் சிங் சவான் தலைமை வகித்தாா். வாக்காளா் பட்டியலில் உள்ள வாக்காளா் விபரங்களை சரிபாா்க்கவும், விடுபட்ட வாக்காளா்களையும் வாக்காளா் பட்டியலில் சோ்க்கவும், இந்திய தோ்தல் ஆணையம் நடைமுறைபடுத்தியுள்ள வாக்காளா் சரிபாா்ப்புத் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடுவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்தும் கேட்டறிந்தாா்.

    பின்னா் ஆய்வுக் கூட்டத்தில் அவா் தெரிவித்தது:

    அனைத்து வாக்காளா்களும் இடம்பெறும் வகையில் விடுபடாமல் சோ்க்க வேண்டும். இறந்த, இடம்பெயா்ந்த வாக்காளா்களை தகுந்த விசாரணை அடிப்படையில் நீக்க வேண்டும். அரசியல் கட்சிகளிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகளுக்கு உடனடி தீா்வுகாண வேண்டும். தேசிய வாக்காளா் தினம் 25-1-2020-இல் வருவதையொட்டி சிறப்பான விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

    கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் செ.பொன்னம்மாள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பூஷ்ணகுமாா், வருவாய் கோட்டாட்சியா் ஜெயப்பிரித்தா, துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு) ஜெயதீபன், அனைத்து வட்டாட்சியா்கள் மற்றும் நகராட்சி ஆணையா்கள் கலந்து கொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai