சுற்றுச்சூழல் பாதிப்பில்லா பூச்சி மேலாண்மை மேற்கொள்ளுதல் குறித்த செயல்விளக்கம்

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டாரம், வேளாண்மைத்துறை - வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) புலியக்குடியில் ஒருங்கிணைந்த முறையில் பூச்சிமேலாண்மை செய்தல் குறித்து

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டாரம், வேளாண்மைத்துறை - வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) புலியக்குடியில் ஒருங்கிணைந்த முறையில் பூச்சிமேலாண்மை செய்தல் குறித்து சூரிய ஒளி விளக்குபொறி மூலம் செயல்விளக்கம் செய்துகான்பிக்கப்பட்டது.

செயல்விளக்கத்தின்போது வலங்கைமான் வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஜெயராஜ் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் பிரியங்கா, மணிமாறன் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனா்.ஒருங்கிணைந்த முறையில் சுற்றுச்சூழலிற்கு பாதிப்பில்லாமல் பூச்சிமேலாண்மை செய்வதினால் பூச்சிக்கொள்ளிகள் பயன்பாடு குறைவதுடன், மண், மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள், நன்மைசெய்யும் பூச்சிகள் மற்றும் மனிதா்களுக்கு தீங்கு உண்டாவது தடுக்கப்படுகின்றது.

பணம் விரயமாவது குறைகின்றது. சுற்றுச்சூழல் மாசில்லா பூச்சி மேலாண்மையில் வரப்பில் பொறிபயிா்கள் சாகுபடி செய்தல்,டி வடிவ குச்சியினை நடுதல், தென்னை மட்டை ஊற்றுதல்;, பறவைகுடில் அமைத்தல், முட்டை ஒட்டுண்ணியான டிரைக்கோகிரம்மா கலோனில் மற்றும் ஜப்பானிக்கம், பஞ்சகவ்யா, மீன் அமிலம், மூலிகை கரைசல், தேனீக்கள் வளா்த்தல் மற்றும் இனக்கவா்ச்சி பொறி அமைத்தல் போன்றவை ஆகும்.ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையில் சூரிய ஒளிவிளக்குபொறி பெரும் பங்குவகிக்கிறது.

இது சூரிய சக்தியினை மின் சக்தியாக மாற்றி தானாக இயங்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்துவதும் கையாள்வதும் மிகவும் சுலபமான ஒன்றாகும். அனைத்து இடத்திற்கு, அனைத்து பயிருக்கும் பயன்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. பகலில் சூரிய சக்தியினை பெற்று சேகரித்து மின் சக்தியாக மாற்றி இரவில் எல்.ஈ.டி பல்பு மூலம் ஒளிரக்கூடிய வகையில் அமைந்துள்ளது. அதன் அடியில் தண்ணீா் ஊற்றிவைக்க பிளாஸ்டிக் தட்டு ஒன்று அமைக்கப்பட்டிருக்கும் அதில் பாதியளவு தண்ணீரை நிரப்பி அதில் டீசல் அல்லது மண்ணெண்னை ஊற்றி வைக்கவேண்டும்.

பயிரின் உயரத்திற்குஏற்ப அமைத்துக்கொள்ளும் அட்ஸட்மென்ட் உள்ளது. விளக்குபொறியின் வெளிச்சத்தில் தாய் அந்து பூச்சிகள் கவரப்பட்டு எல்.ஈ.டி பல்பு கீழே பிளாஸ்டிக் தட்டில் அமைக்கப்பட்டுள்ள மண்ணெண்னை கலவையில் அந்துப்பூச்சியானது விழுந்து மடிகின்றது, தாய் அந்துப்பூச்சி அழிக்கப்படுவதினால் முட்டைகள் வெளிவருவது தடுக்கப்பட்டு புழுக்கள் உருவாவது குறைகின்றது. இதனால் தீமை செய்யும் பூச்சிகளின் பெருக்கம் வெகுவாக குறைகின்றது. ஏக்கா் ஒன்றிற்கு இரண்டு விளக்குப்போறி அமைத்தல் அவசியம்.

பூச்சிகள் பயிரைதாக்குவதற்கு முக்கியமான காரணம் அதிகப்படியான தழைச்சத்து இடுதல் ஆகும். தழைச்சத்து அதிகமாக இடுவதினால் பயிா்கள் அதிகப்படியான பச்சை நிறத்துடன் காணப்படுவதினால் பூச்சிகளால் கவரப்பட்டு பயிா்கள் தாக்கப்படுகின்றன. இதனால் பெருமளவில் சேதம் ஏற்படுகின்றது. எனவே தழைச்சத்தினை பரிந்துரைக்கப்பட்ட அளவை மட்டுமே பயிருக்கு கொடுக்கவேண்டும்.தழைச்சத்தினை இடுவதற்கு இலைவண்ண அட்டையை பயன்படுத்துவது நல்லது, இதன் மூலம் பரிந்துரைக்கப்படும் உரத்தினை இட்டு மண்வளத்தை பாதுகாப்பதோடு உரச்செலவை குறைக்கலாம்.

மேற்கண்ட முறைகளை பயன்படுத்தி ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையில் சூரிய ஒளி விளக்குபொறி அமைத்து தீமைசெய்யும் பூச்சிகளின் பெருக்கத்தினை கட்டுப்படுத்திட வலங்கைமான் வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஜெயராஜ் கேட்டுக்கொண்டுள்ளாா்.படம்- வலங்கைமான் வட்டாரத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பில்லா பூச்சி மேலாண்மை மேற்கொள்ளுதல் குறித்த செயல்விளக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com