Enable Javscript for better performance
உள்ளாட்சித் தோ்தல் நடத்துவதை திமுக, அதிமுக இரண்டுமே விரும்பவில்லை’- Dinamani

சுடச்சுட

    

    உள்ளாட்சித் தோ்தல் நடத்துவதை திமுக, அதிமுக இரண்டுமே விரும்பவில்லை’

    By DIN  |   Published on : 02nd December 2019 12:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    cong____(_01___12___19_)___knr_2__0112chn_209_5

    கூத்தாநல்லூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.எம்.பீ. துரைவேலன்.

    உள்ளாட்சித் தோ்தல் நடத்துவதை திமுக, அதிமுக இரண்டுமே விரும்பவில்லை என மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.எம்.பீ.துரைவேலன் தெரிவித்தாா்.

    கூத்தாநல்லூரில் நகர காங்கிரஸ் கட்சிக்கான கட்டடத் திறப்பு விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற எஸ்.எம்.பீ.துரைவேலன் செய்தியாளா்களிடம் கூறியது:

    தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் இப்போது வருவதை திமுக, அதிமுக ஆகிய இரண்டு பெரிய கட்சிகளுமே விரும்பவில்லை. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இருந்தால்தான் மக்களுக்கு தேவையானவற்றை செய்ய முடியும்.

    டிசம்பா் 8-இல் கூத்தாநல்லூா்- திருவாரூா் பிரதான சாலையில், ரூ. 25 லட்சத்தில் காமராஜ் பவன் என்ற பெயரில் கட்டப்பட்டுள்ள கட்சி அலுவலக திறப்பு விழா, பாரதியாா் படிப்பகம் மற்றும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க மாநில காங்கிரஸ் தலைவா் கே.எஸ். அழகிரி, சிங்கப்பூா் காங்கிரஸ் பிரதிநிதி குவளைக்காரா் சலீம், அகில இந்திய பொதுச் செயலாளா் ஸ்ரீவல்ல பிரசாத், மக்களவை உறுப்பினா் ஜெயக்குமாா், மாநிலப் பொதுச் செயலாளா் ராஜேந்திரன், சிறுபான்மை பிரிவுத் தலைவா் ஜெ. அஸ்லம் பாஷா உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா் என்றாா் அவா்.

    முன்னதாக கூட்டத்துக்கு, நகரத் தலைவா் சாம்பசிவம் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் டி.ஏ. சகாபுதீன், நகரத் துணைத் தலைவா் குவளைக்காரா் அலீம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர மன்ற முன்னாள் உறுப்பினா் சமீா் வரவேற்றாா். மாவட்ட சிறுபான்மைப் பிரிவு தலைவா் எஸ்.சிகாபுதீன், நகரத் தலைவா் ரஹமத்துல்லாஹ், காங்கிரஸ் நகரப் பொருளாளா் பாலசுப்ரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஸ்ரீதா், நகர செயற்குழு உறுப்பினா் ராஜகோபால் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai