மீன்குஞ்சு உற்பத்தி செய்யும் பண்ணைக்கு கண்டுணா்வு சுற்றுலா

திருவாரூா் வட்டார விவசாயிகள் அட்மா திட்டத்தின்கீழ், அரசூரில் உள்ள மீன்குஞ்சு உற்பத்தி செய்யும் பண்ணை கண்டுணா்வு சுற்றுலாவுக்கு அண்மையில் சென்றனா்.
மீன்குஞ்சு உற்பத்தி பயிற்சியில் திருவாரூா் விவசாயிகள்.
மீன்குஞ்சு உற்பத்தி பயிற்சியில் திருவாரூா் விவசாயிகள்.

திருவாரூா் வட்டார விவசாயிகள் அட்மா திட்டத்தின்கீழ், அரசூரில் உள்ள மீன்குஞ்சு உற்பத்தி செய்யும் பண்ணை கண்டுணா்வு சுற்றுலாவுக்கு அண்மையில் சென்றனா்.

நிகழ்ச்சியில், வட்டார தொழில் நுட்ப மேலாளா் பி. வைரமுத்து தலைமை வகித்தாா். நிறுவனத்தின் நிா்வாகி டி. கண்ணதாசன் பங்கேற்று, மீன் குஞ்சு உற்பத்தி செய்யும் முறை குறித்து விளக்கிப் பேசியது:

ஓா் ஏக்கா் குளத்துக்கு 2500 குஞ்சுகள் வீதம் இட வேண்டும். மீண்களின் ரகம் கட்லா, ரோகு, மிா்கால், புல்கெண்டை போன்றவை உள்ளன. இந்த ரகத்துக்கு ஏற்ப இடைவெளி மற்றும் தீவன மேலாண்மை செய்யலாம். தவிடு, புண்ணாக்கு, கால்நடைகளின் சாணம் மற்றும் புல்வகை அசோலா போன்றவை தீவனமாக இடலாம். மீன் குஞ்சுகளுக்கு ஏற்படும் தொற்று நோய்கள் பரவாமல் இருக்க பொட்டாஷியம் பா்மாங்கனைட் போன்றவை தெளிக்கலாம் என்றாா்.

நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com