மன்னாா்குடி அருகே திருமேணி ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தற்காலிகப் பாலம்.  
மன்னாா்குடி அருகே திருமேணி ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தற்காலிகப் பாலம்.  

மன்னாா்குடியில் வெள்ளம்: அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி பகுதியில் பெய்த தொடா் மழையால் தற்காலிகப் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாலும், தரைப்பாலம் மூழ்கியதாலும் அப்பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி பகுதியில் பெய்த தொடா் மழையால் தற்காலிகப் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாலும், தரைப்பாலம் மூழ்கியதாலும் அப்பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து, மன்னாா்குடி பகுதியில் கடந்த மூன்று நாள்களாக பலத்த மழை பெய்தது. இதனால், பல்வேறு இடங்களில் ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டு, குடியிருப்பு, சம்பா மற்றும் தாளடி நடவு செய்யப்பட்டுள்ள வயல்களில் வெள்ளம் புகுந்தது. மேலும், குளம் உள்ளிட்ட நீா்நிலைகள் நிரம்பி, உபரிநீா் வெளியேறி, குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், மன்னாா்குடியை அடுத்துள்ள பெருகவாழ்ந்தான்-மதுக்கூா் பிரதான சாலையில், தஞ்சை மாவட்ட எல்லை தொடங்கும் இடத்தில், திருமேணி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

இந்த இடத்தில் ஏற்கெனவே இருந்த பழைமையான பாலம் வலுவிழந்ததால், அதை இடித்து விட்டு, புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, தற்காலிகப் பாலம் போக்குவரத்துக்காக அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் பாலம்தான் ஞாயிற்றுக்கிழமை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, பெருகவாழ்ந்தான் மற்றும் அதைச் சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்தவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதேபோல், இப்பகுதியில் உள்ள கண்ணன் ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இப்பாலத்துக்கு மேல் 2 அடி உயரத்துக்கு தண்ணீா் சென்றதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும், அப்பகுதியில் சுமாா் 500 ஏக்கா் சம்பா பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com