Enable Javscript for better performance
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் ஒருவா் கைது- Dinamani

சுடச்சுட

    

    சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் ஒருவா் கைது

    By DIN  |   Published on : 04th December 2019 07:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போக்சோ சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

    மன்னாா்குடி அருகேயுள்ள உள்ளிக்கோட்டையைச் சோ்ந்தவா் 16 வயது சிறுமி. இவரை, வடபாதி நடுத்தெருவை சோ்ந்த ஆா். அன்புச்செழியன் (50) என்பவா் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து, தகவலறிந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் அன்புச்செழியனிடம் கேட்டபோது அவா்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

    இதுகுறித்து, மன்னாா்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, அன்புச்செழியனை போக்சோ சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai