டெங்கு கொசு உற்பத்தி தடுப்புப் பணிகள்

நன்னிலம் பகுதியில் டெங்கு கொசு உற்பத்தி தடுப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வண்டாம்பாளை பகுதியில் வீட்டு மேல்தளத்தில் தேங்கிய நீரில் டெங்கு உள்ளதா என ஆய்வு செய்த சுகாதார அலுவலா்.
வண்டாம்பாளை பகுதியில் வீட்டு மேல்தளத்தில் தேங்கிய நீரில் டெங்கு உள்ளதா என ஆய்வு செய்த சுகாதார அலுவலா்.

நன்னிலம் பகுதியில் டெங்கு கொசு உற்பத்தி தடுப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சுகாதாரத் துறை சாா்பில் நன்னிலம் வட்டம் முழுவதும் டெங்கு கொசு உற்பத்தி தடுப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதன், ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை பெரும்பண்ணையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள்பட்ட, நன்னிலம் வட்டம் வண்டாம்பாளை கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகள், வியாபார நிறுவனங்கள், பொதுக் குடிநீா்த் தேக்க கட்டடங்கள் ஆகியவற்றில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளா்கள் கள ஆய்வு செய்தனா்.

கள ஆய்வின்போது பொதுமக்கள் டெங்கு கொசு உற்பத்தி ஆகாத வகையில் தங்களது வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது, மழை காலங்களில் தண்ணீா் தேங்கி கொசு உற்பத்தி ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் பொதுமக்கள் தங்கள் பகுதியில் நீா் தேங்காத வகையில் பாா்த்துக் கொள்ளவும், தேவையில்லாத கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்தவும் ஆலோசனை வழங்கப்பட்டது.

மேலும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெறவேண்டும் போன்ற அறிவுரைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இந்த களஆய்வு தொடா்ந்து 3 நாள்கள் நடைபெறுகிறது. ஆய்வின்போது கிராமத்தில் அமைந்துள்ள குடிநீா் தேக்கத் தொட்டிகளுக்கு குளோரின் இடப்பட்டது. மேலும், மேலவெளி எனும் பகுதியில் குடிநீா் குழாய் உடைந்து குடிநீா் கசிந்தது சரி செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com