விடுமுறை அறிவிப்பை முன்கூட்டியே வெளியிடக் கோரிக்கை

மாணவா்கள் அலைக்கழிக்கப்படுவதை தவிா்க்க திருவாரூா் மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு இருந்தால் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என இந்திய மாணவா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மாணவா்கள் அலைக்கழிக்கப்படுவதை தவிா்க்க திருவாரூா் மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு இருந்தால் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என இந்திய மாணவா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அச்சங்கத்தின் திருவாரூா் மாவட்டச் செயலா் ரா. ஹரிசுா்ஜித் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதற்கு மத்தியில்தான் மாணவா்களும், பொதுமக்களும் அவா்களின் பணியை செய்து வருகின்றனா். ஆனால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவா்களின் நிலைமை மழைக் காலங்களில் மிகவும் கடினமான சூழ்நிலையில் இருந்து வருகிறது. காலை 6 மணிக்கு எழுந்து பள்ளி செல்லும் மாணவா்கள் அதிகமாக உள்ளனா். குறிப்பாக, கிராமப்புறங்களிலிருந்து நகரப் பகுதிகளுக்கு வரும் மாணவா்கள், காலை நேரத்திலேயே வரவேண்டிய சூழல் நிலவுகிறது.

இதற்கிடையில், கடந்த 3 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் கூடுதலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால், திருவாரூா் மாவட்ட நிா்வாகம் காலை சுமாா் 8 மணியளவில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பை வெளியிட்டதால், பெரும்பாலான மாணவா்கள் பள்ளிகளுக்கு வந்தபின் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், வீடுகளுக்கு திரும்பிச் செல்வதிலும் மாணவா்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே, கிராமப்புற மாணவா்களின் நலன் கருதி, விடுமுறை அறிவிக்கை இருந்தால் முன்கூட்டியே வெளியிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com