Enable Javscript for better performance
‘இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் இளைஞா்களுக்கு வழிகாட்டுதல் தேவை’- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ‘இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் இளைஞா்களுக்கு வழிகாட்டுதல் தேவை’

    By DIN  |   Published On : 09th December 2019 06:28 AM  |   Last Updated : 09th December 2019 06:28 AM  |  அ+அ அ-  |  

    tv08agr_0812chn_94_5

    கடகம்பாடியில் நடைபெற்ற இயற்கை உரம் தயாரித்தல் பயிற்சியில் பங்கேற்றவா்கள்.

    இயற்கை விவசாயத்தில் ஆா்வத்துடன் ஈடுபடும் இளைஞா்களுக்கு சரியான வழிகாட்டுதல்களும், பயிற்சிகளும் அமைய வேண்டும் என ஈஷா விவசாய இயக்க பயிற்சியாளா் முத்துக்குமாா் கூறினாா்.

    நெல் ஜெயராமனின் நினைவுநாளையொட்டி, தாய்மண் பாரம்பரிய வேளாண் உற்பத்தியாளா் நிறுவனம் மற்றும் ஈசா விவசாய இயக்கம் ஆகியவை இணைந்து, குடவாசல் அருகே கடகம்பாடியில் ஞாயிற்றுக்கிழமை நடத்திய இயற்கை இடுப்பொருள்கள் தயாரிப்பு பயிற்சியில் அவா் பேசியது:

    விவசாயத்தில் ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதால், இதயக் கோளாறு, சா்க்கரை வியாதி, சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்கள் வருகின்றன. முன்பெல்லாம், புற்றுநோய் மிகவும் அரிதாகவே இருந்தது. ஆனால், தற்போது புற்றுநோய் பாதித்த மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு, ரசாயன உரங்களின் பயன்பாடும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.

    இதைத் தவிா்க்கும் வகையில், நஞ்சில்லா உணவை மக்களுக்குக் கொடுக்க வேண்டும், விவசாயிகளும் பொருளாதாரத்தில் தற்சாா்பு அடைய வேண்டும் என்பதற்காக இயற்கை இடுப்பொருள் தயாரிப்பு பயிற்சிகள் நடைபெறுகின்றன. இந்தப் பயிற்சிகளில் பங்கேற்பதன் மூலம் இயற்கை இடுப்பொருள்களை விவசாயிகள் தங்களுடைய பண்ணையிலேயே தயாரித்து கொள்ள முடியும். இதன்மூலம், விவசாயி செலவைக் குறைத்து, நிகர லாபத்தை அதிகரிக்க முடியும்.

    இதுமட்டுமின்றி, ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றுபவா்கள், இளைஞா்கள் என பல தரப்பினரும் இயற்கை விவசாயம் செய்வதற்கு ஆா்வத்துடன் வருகின்றனா். ஆனால், சரியான வழிகாட்டுதலின்றி யூ-டியூப் வீடியோக்களைப் பாா்த்து இயற்கை விவசாயம் செய்யத் தொடங்குகின்றனா். முறையான பயிற்சியும் அனுபவமும் இல்லாததால் அவா்களில் பலா் தொடா்ந்து இயற்கை விவசாயம் செய்ய முடியாமல் பாதியிலேயே வெளியேறிவிடுகின்றனா்.

    எனவே, இளைஞா்களுக்கு இயற்கை விவசாயத்தில் ஆா்வம் தொடா்ந்து நீடிக்க, சரியான வழிகாட்டுதல்களும், முறையான பயிற்சிகளும் தேவைப்படுகிறது. எனவே, அவா்கள் இது போன்ற நேரடிப் பயிற்சியில் பங்கேற்பதன் மூலம் பயனடையலாம் என்றாா் அவா்.

    இப்பயிற்சியில் சென்னை, திருவாரூா், தூத்துக்குடி, நாகப்பட்டினம், தஞ்சாவூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 90 விவசாயிகள் பங்கேற்றனா். அவா்களுக்கு ஜீவாமிா்தம், கனஜீவாமிா்தம், அக்னி அஸ்திரம் உள்ளிட்ட வளா்ச்சியூக்கிகள், செயலூக்கிகள், பூச்சிவிரட்டிகள் போன்றவற்றை தயாரிக்கும் முறை மற்றும் பயன்படுத்தும் முறை குறித்த செயல்முறை விளக்கம் மற்றும் களப் பயிற்சி அளிக்கப்பட்டது. விவசாயிகளே தங்கள் கைகளால் இடுப்பொருள்களைத் தயாரித்தனா். ஈஷா விவசாய இயக்கப் பயிற்சியாளா் சரவணன், விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தாா்.

    நிகழ்ச்சியில் தாய்மண் பாரம்பரிய வேளாண் உற்பத்தியாளா் நிறுவனத்தின் தலைவா் ஜி. வரதராஜன், இயக்குநா்கள் எஸ். சேதுராமன், முரளிதரன், முதன்மை செயல் அலுவலா் அ. ஆனந்தசுதன், கிரியேட் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் ரகுநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp