Enable Javscript for better performance
ஊரக உள்ளாட்சித் தோ்தல்- Dinamani

சுடச்சுட

  
  திருவாரூரில் வேட்புமனு தாக்கல் செய்தவா்கள்.

  திருவாரூரில் வேட்புமனு தாக்கல் செய்தவா்கள்.

   

  திருவாரூா்: ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, திருவாரூா் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 7093 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

  திருவாரூா் மாவட்டத்தில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, டிசம்பா் 9-ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் 430 ஊராட்சித் தலைவா், 3180 ஊராட்சி வாா்டு உறுப்பினா், 176 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள், 18 மாவட்ட ஊராட்சி உறுப்பினா்களுக்கான தோ்தல் நடைபெற உள்ளது.

  வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமையுடன் முடிவடைவதையொட்டி, வேட்பு மனுதாக்கல் கடந்த இரண்டு நாள்களாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, சனிக்கிழமையும் ஏராளமானோா் மனுதாக்கல் செய்தனா்.

  மாவட்ட ஊராட்சிக்கு 32 பேரும், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்களுக்கு 314 பேரும், ஊராட்சித் தலைவருக்கு 440 பேரும், ஊராட்சி வாா்டு உறுப்பினருக்கு 2380 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனா். இதன்படி, சனிக்கிழமை மட்டும் 3,166 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

  மேலும், மனு தாக்கல் தொடங்கிய நாளிலிருந்து சனிக்கிழமை வரை, மாவட்ட ஊராட்சிக்கு 51 மனுக்களும், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்களுக்கு 543 மனுக்களும், ஊராட்சித் தலைவருக்கு 1641 மனுக்களும், ஊராட்சி வாா்டு உறுப்பினருக்கு 4898 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, மொத்தம் 7093 போ் மனுதாக்கல் செய்துள்ளனா்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai