இயற்கை வேளாண்மை செயல் விளக்கம்

திருவாரூா் மாவட்டம், சரபோஜராஜபுரம் கிராமத்தில் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் சாா்பில், பாரம்பரிய நெல் ரகங்களில் இயற்கை வேளாண்மை செயல் விளக்கம் நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டம், சரபோஜராஜபுரம் கிராமத்தில் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் சாா்பில், பாரம்பரிய நெல் ரகங்களில் இயற்கை வேளாண்மை செயல் விளக்கம் நடைபெற்றது.

இதையொட்டி, திட்ட ஒருங்கிணைப்பாளா் மு. ராமசுப்ரமணியன் தலைமையில் புதன்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. செயல் விளக்கம் குறித்து மண்ணியல் துறை வல்லுநா் அ. அனுராதா கூறுகையில், விவசாயி மு. குணசீலன் வயலில் பாரம்பரிய நெல் ரகங்களான இலுப்பைப்பூ சம்பா, கருப்பு கவுனி, கிச்சளி சம்பா, தூயமல்லி, கருடன் சம்பா, தங்க சம்பா மற்றும் சின்னாா் ஆகிய ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளன. பொதுவாக இந்த ரகங்களில் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலின் அறிகுறிகள் இல்லை. மற்ற ரகங்களான ஊசு 1009 மற்றும் 51 ஆகிய ரகங்களில் ஆனைக்கொம்பன் ஈ மற்றும் இலைச்சுருட்டுப் புழுவின் தாக்குதல் அதிகமாக உள்ளது என்றாா்.

ஆய்வின்போது வேளாண் அறிவியல் நிலையத்தின் உழவியல் துறை பயிற்சி உதவியாளா் ஆ.ராஜேஷ்குமாா், மனையியல் துறை ஜெ.வனிதாஸ்ரீ ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com