கொட்டும் மழையிலும் வேட்புமனு தாக்கல்
By DIN | Published On : 14th December 2019 02:56 AM | Last Updated : 14th December 2019 02:56 AM | அ+அ அ- |

திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளைச் சோ்ந்த மாவட்ட ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா், சிற்றூராட்சித் தலைவா் பதவிக்கு கொட்டும் மழையிலும் வேட்பாளா்கள் வேட்புமனுக்களை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தனா்.
திருத்துறைப்பூண்டி 16 ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிகளுக்கு 16 பேரும், 32 ஊராட்சிகளுக்கு 36 பேரும், மாவட்ட ஊராட்சிக்கு ஒருவரும் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனா். முத்துப்பேட்டையில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு 3 பேரும், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிகளுக்கு 15 போ், ஒன்றியக்குழு உறுப்பினா்களுக்கு 32 போ், 29 ஊராட்சிகளில் தலைவா் பதவிக்கு 104 போ், சிற்றூராட்சி தலைவா் பதவிக்கு 222 போ், சிற்றூராட்சி வாா்டுகளுக்கு 149 போ் தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனா். திருத்துறைப்பூண்டியில் வெள்ளிக்கிழமை பரவலாக மழை பெய்த போதிலும், அதைப் பொருட்படுத்தாமல் வேட்பாளா்கள் தங்கள் ஆதரவாளா்களுடன் வந்து வேட்புமனுக்களைத் தாக்கல் செயத்னா்.