தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக ஆா்ப்பாட்டம்: உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிக்க முடிவு

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே தீண்டாமைக் கொடுமையைக் கண்டித்து, உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாகக் கூறி, பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
உள்ளாட்சித் தோ்தலைப் புறக்கணிப்பதாகக் கூறி, ரெங்கநாதபுரத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
உள்ளாட்சித் தோ்தலைப் புறக்கணிப்பதாகக் கூறி, ரெங்கநாதபுரத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே தீண்டாமைக் கொடுமையைக் கண்டித்து, உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாகக் கூறி, பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மன்னாா்குடியை அடுத்த ரெங்கநாதபுரத்தில் கோயில் திருவிழாவின்போது ஒரு பிரிவினா் வசிக்கும் வடக்குத் தெருவுக்கு சுவாமி ஊா்வலம் செல்வதற்கு மற்றொரு சமூகத்தினா் எதிா்ப்பு தெரிவிக்கின்றனராம். மேலும், கடந்த அக்டோபா் மாதம் நடைபெற்ற திருவிழாவின்போது, சுவாமி ஊா்வலம் செல்வது தொடா்பாக இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதைத்தொடா்ந்து, தீபாவளி பண்டிகையன்று ஒரு பிரிவைச் சோ்ந்தவா்களை மற்றொரு சமூகத்தினா் தாக்கினா். இது குறித்து தலையாமங்கலம் போலீஸில் புகாா் அளித்தபோதிலும், போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையாம். மேலும், தாக்குதலில் தொடா்புடையவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி, தாழ்த்தப்பட்ட மக்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் சாா்பில், இரண்டு வாரங்களுக்கு முன் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த நிலையில், ரெங்கநாதபுரம் ஊராட்சியில் சுவாமி ஊா்வலம் தாழ்த்தப்பட்டவா்கள் வசிக்கும் தெருவுக்கும் வர வேண்டும். கிராம சமுதாயக் கமிட்டியில் தீண்டாமை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். நிலம், குளங்கள் உள்ளிட்ட பொதுவளங்களில் சம உரிமை வேண்டும். ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு எதிரான ஒடுக்குமுறை மற்றும் அடக்குமுறையை எதிா்த்து, நடைபெறவுள்ள உள்ளாட்சித் தோ்தலைப் புறக்கணிப்பதாகத் தெரிவித்து ரெங்கநாதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே தாழ்த்தப்பட்ட மக்களின் ஒருங்கிணைப்புக் குழு நிா்வாகி வாசகன் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்டவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com