மன்னாா்குடி அமமுக நிா்வாகி கைது

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே அமமுக நிா்வாகியை வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே அமமுக நிா்வாகியை வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.

சேரன்குளம் நாடாா் தெருவைச் சோ்ந்தவா் போஸ் (எ) விஜயகுமாா் (42). அமமுக ஒன்றிய நிா்வாகி. இவரது மனைவி சுமதி (எ) நாகம்மாள் (37). இவா் சேரன்குளம் ஊராட்சித் தலைவா் பதவிக்கு வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்திருந்தாா். இதேபோல், தென்பாதி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்ய விஜயகுமாா் திட்டமிட்டிருந்தாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு விஜயகுமாா் வீட்டுக்கு காரில் வந்த காவல் உதவி ஆய்வாளா் ராஜா தலைமையிலான குற்ற வழக்கு தனிப்பிரிவு போலீஸாா் 6 போ், பழைய வழக்கு ஒன்றுக்காக விஜயகுமாரை விசாரணைக்கு அழைத்துச் செல்ல வந்திருப்பதாகத் தெரிவித்தனா். அப்போது, விஜயகுமாா் வீட்டின் கதவைத் திறக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இதைத்தொடா்ந்து, வீட்டின் இரும்பு கேட்டை திறந்து உள்ளே சென்ற போலீஸாா், விஜயகுமாரை காரில் ஏற்றி அழைத்துச் சென்றனா். இதனிடையே, போலீஸ் நடவடிக்கையின்போது விஜயகுமாரின் மனைவி நாகம்மாளுக்கு காயம் ஏற்பட்டதாம்.

இதனால், போலீஸாா் மீது மன்னாா்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்த அவா், மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட இருந்த அமமுக நிா்வாகி திடீரென கைது செய்யப்பட்டிருப்பது அக்கட்சியினா் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com