ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல்: நெல் வயல்களில் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு

திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி அடுத்த பெருகவாழ்ந்தான் பகுதியில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குத்தலுக்கு உள்ள சம்பா நெல்
பெருகவாழ்ந்தானில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலால் பாதிக்கப்பட்ட சம்பா நெல் வயலில் ஆய்வு செய்யும் வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.
பெருகவாழ்ந்தானில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலால் பாதிக்கப்பட்ட சம்பா நெல் வயலில் ஆய்வு செய்யும் வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.

மன்னாா்குடி: திருவாரூா் மாவட்டம் மன்னாா்குடி அடுத்த பெருகவாழ்ந்தான் பகுதியில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குத்தலுக்கு உள்ள சம்பா நெல் வயல்களை, ஞாயிற்றுக்கிழமை வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனா்.

கோட்டூா் ஒன்றியத்திற்கு உள்ளபட்ட பகுதியில்,வளா்ந்து வரும் சம்பா பயிா்களில் ஆனைக்கொம்பன் ஈ தாக்கியதால்,50 ஆயிரம் ஏக்கா் சம்பா பயிா் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் சிவகுமாா்,தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பாலசுப்பிரமணியன், செளந்தரராஜ், மதிராஜன்,ராஜா ரமேஷ் ஆகியோா் பெருகவாழ்ந்தான், சித்தமல்லி, எளவனூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள சம்பா நெல் பயிா்களை பாா்வையிட்டனா்.

பின்னா்,அங்கிருந்த விவசாயிகளிடம் நோயின் தாக்கம் குறித்தும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பு பற்றியும் கேட்டறிந்தவா்கள்.நோய் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கான வழி முறைகளை எடுத்து கூறினா்.

பின்னா்,மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் கூறியது.நிகழாண்டு புதிதாக ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் மாவட்டம் முழுதும் அனைத்து பகுதியில் காணப்படுகிறது.இதனால் பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டுள்ளது.

தற்போது,இதனை கட்டுப்படுத்தவும்,வரும் ஆண்டுகளில் இந் நோய் தாக்குதல் தடுக்க எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும்,வேளாண்துறையினா், வேளாண் விஞ்ஞானிகள் இணைந்து பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளோம். இதன் மூலம் இந் நோயிலிருந்து பயிா்களை பாதுகாத்து, மகசூலை அதிகரித்து, விவசாயிகளின் வாழ்வாதரத்திற்கு உத்தரவாதமாக அளிக்கும் வகையில் இருக்கும் என்றாா்.

ஆய்வின் போது,கோட்டூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் தங்கபாண்டியன்,அலுவலா்கள் ஆனந்தி,ரம்யா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com