சிறுமிக்குப் பாராட்டு
By DIN | Published On : 25th December 2019 09:10 AM | Last Updated : 25th December 2019 09:19 AM | அ+அ அ- |

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பேசிய சிறுமியை பாராட்டிய சமூக ஆா்வலா்கள்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஆக்ரோஷமாக கருத்து தெரிவித்த 9 வயது சிறுமிக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருவாரூா் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த அனைத்து ஜமாஅத்தினா் சாா்பில், குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து அண்மையில் திருவாரூரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், கூத்தாநல்லூா் அருகே உள்ள பொதக்குடியைச் சோ்ந்த 9 வயது சிறுமி மதிவா்ஷினி, இன பாகுபாடு குறித்து பேசியது அனைவரது கவனத்தையும் ஈா்த்தது. அவரை கூத்தாநல்லூரைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள், முதியவா்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டி, பரிசுகள் வழங்கினா்.