Enable Javscript for better performance
புயல் நிவாரணம் கோரி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    புயல் நிவாரணம் கோரி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 01st February 2019 01:22 AM  |   அ+அ அ-   |    |  


    கஜா புயலில் பாதிக்கப்பட்ட பயிர்கள், தென்னை உள்ளிட்டவைகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில், திருவாரூர், நீடாமங்கலம், வலங்கைமான், மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பு அமைப்பான தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பயிர்கள், தென்னை உள்ளிட்டவைகளுக்கும், விடுபட்ட வீடுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும், 2017-18 ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீடுத் தொகையையை வழங்க வேண்டும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
    திருவாரூரில்...
    திருவாரூர் அருகேயுள்ள மருதப்பட்டினத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே. புலிகேசி தலைமை வகித்தார். இதேபோல், மாங்குடியில் ஒன்றிய நிர்வாகக் குழு உறுப்பினர் எம். நாகராஜன் தலைமையிலும், தென்னவராயநல்லூரில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பி.எஸ். நாகராஜன், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் தியாகராஜன் ஆகியோர் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    மன்னார்குடியில்...
     மன்னார்குடி, கோட்டூர் பகுதியில் உள்ள 51கிராம நிர்வாக அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கோட்டூரை அடுத்துள்ள களப்பால் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.எஸ். மாசிலாமணி தலைமையிலும், வல்லூரில் கோட்டூர் ஒன்றியச் செயலாளர் பி. பரந்தாமன் தலைமையிலும் என கோட்டூர் ஒன்றியத்தில் மொத்தம் 30 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     இதேபோல், மன்னார்குடி ஒன்றியத்தில் ஆலங்கோட்டை கிராம நிர்வாக அலுவலகம் முன்பு விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் என். மகேந்திரன் தலைமையிலும், மன்னார்குடியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ராமபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், சங்கத்தின் ஒன்றியத் தலைவர் எ.ராஜேந்திரன் தலைமையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மன்னார்குடி ஒன்றியத்தில் மொத்தம் 21 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அனைத்து இடங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
    கூத்தாநல்லூர் வட்டத்தில்...
    கூத்தாநல்லூர், ஜன. 31: கூத்தாநல்லூர் வட்டத்தில் மஞ்சனவாடி திருராமேஸ்வரம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் வை.செல்வராஜ் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் வீரமணி, விவசாயிகள் சங்க  ஒன்றியச் செயலாளர் ஆர். சதாசிவம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 
    இதில், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றியச் செயலாளர் பாப்பையன், மாவட்டக் குழு  உறுப்பினர் மாரியப்பன், ஒன்றிய நிர்வாகக் குழு உறுப்பினர் சிவானந்தம், கூட்டுறவு வங்கித் தலைவர் ஜெயபால், மாதர் சங்க நிர்வாகி லட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
    இதேபோல் ஓவர்சேரி, பழையனூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    திருத்துறைப்பூண்டியில்...
     திருத்துறைப்பூண்டியில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நீரில் மூழ்கி சேதமான பயிர்கள், கணக்கெடுப்பில் விடுபட்ட தென்னை மரங்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் முழக்கமிட்டனர். 
    ஆர்ப்பாட்டத்துக்கு, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் கே. உலகநாதன் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்டத் துணைச் செயலாளர் கே.ஆர். ஜோசப் முன்னிலை வகித்தார். ஒன்றியச் செயலாளர் ஜெயபால் , நகரச் செயலாளர் டி.பி. சுந்தர், இந்திய கம்யூனிஸ்ட் வட்டத் துணைச் செயலாளர் ஞானமோகன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் வி. சந்திரராமன், ஒன்றியச் செயலாளர் அ. பாஸ்கர், நகரச் செயலாளர் எம். முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    நீடாமங்கலத்தில்...
     நீடாமங்கலம் அருகேயுள்ள ஒளிமதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் நடேச. தமிழார்வன் தலைமையில், தேவங்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி மார்க்ஸ் தலைமையில், பூவனூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கே. பாரதிமோகன் தலைமையில், ஆதனூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி கே. ராவணன் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதேபோல், நீடாமங்கலத்திலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
    வலங்கைமானில்...
    இதே கோரிக்கையை வலியுறுத்தி, வலங்கைமான், ஆலங்குடி, கொட்டையூர், அரையூர், மாணிக்கமங்கலம், நார்த்தாங்குடி, ஆவூர் ஆகிய இடங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp