அரசுப் பள்ளிக்கு பெற்றோர்கள் சார்பில் சீர்வரிசை

கூத்தாநல்லூர் அருகே அரசுப் பள்ளிக்கு பெற்றோர்கள் சீர்வரிசை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கூத்தாநல்லூர் அருகே அரசுப் பள்ளிக்கு பெற்றோர்கள் சீர்வரிசை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நீடாமங்கலம்  ஊராட்சி  ஒன்றியத்துக்குள்பட்ட  ஆய்குடி, அகரப்பொதக்குடி  நடுநிலைப் பள்ளியில், பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து  பள்ளிக் கூடத்துக்குத் தேவையான பொருள்களை சீர்வரிசையாக கொண்டு செல்லும்  ஊர்வலம் பிரதானச் சாலையிலிருந்து நாகசுரம்  முழங்க தொடங்கியது. இதில், ஊர் பெரியவர்கள் பங்கேற்று பள்ளிக்குத் தேவையான பொருள்களை கொண்டு வந்தனர்.
ஊர்வலம் பள்ளியை வந்தடைந்ததும் நடைபெற்ற  நிகழ்ச்சிக்கு, வட்டார  வளமைய மேற்பார்வையாளர்  எம். எழிலரசி தலைமை வகித்தார். சமூக ஆர்வலர் அப்துல்காதர், தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் எம்.தியாகராஜன்  உள்ளிட்டோர் முன்னிலை  வகித்தனர். தலைமையாசிரியர் இரா. ராஜலெட்சுமி வரவேற்றார். ஆசிரியர் ஆறுமுகம் தொகுத்து வழங்கினார். 
நிகழ்ச்சியில், பள்ளிக்குத் தேவையான சுவர் கடிகாரங்கள், பீரோ, நாற்காலிகள், தண்ணீர் நிரப்பும் பாத்திரங்கள் மற்றும் நோட்டுகள் உள்ளிட்ட எழுதுபொருள்கள் என ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை  தலைமையாசிரியர் ராஜலெட்சுமியிடம் வழங்கினர். 
இந்நிகழ்ச்சியில், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் அருளானந்த மேரி, ஆசிரியர்கள் டி. தமிழ்ச் செல்வன், எஸ். மாதவன் உள்ளிட்ட  பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com