சுடச்சுட

  

  மன்னார்குடி அருகே ஏரியில் மாடுகளை குளிப்பாட்டியபோது, தண்ணீரில் முழ்கிய இளைஞர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
  தளிக்கோட்டை காலனி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் எஸ். இளையராஜா (28). இவர் நல்லிக்கோட்டை காமணல் ஏரியில் மாடுகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த போது, ஆழமான பகுதியில் சிக்கிக் கொண்டாராம். 
  தகவலறிந்த தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து அப்பகுதி இளைஞர்களுடன் இணைந்து ஏரியில் இறங்கி, நீரில் முழ்கிய இளையராஜாவை சடலமாக மீட்டனர். இதுகுறித்து பரவாக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai