சுடச்சுட

  

  வலங்கைமான் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், ஊராட்சி சபைக் கூட்டம் சனி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  கீழவிடையல் ஊராட்சிக்கு உள்பட்ட விடையல்கருப்பூர் கிராமத்தில் நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்துக்கு, திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கே. கலைவாணன் தலைமை வகித்தார்.
  வலங்கைமான் கிழக்கு ஒன்றியச் செயலாளர் கோ. தெட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். ஒன்றியப் பிரதிநிதி கிருஷ்ணபாலன் நன்றி கூறினார்.
  இதேபோல் மேலவிடையல், சித்தன்வாழூர், கண்டியூர், மாத்தூர், கொட்டையூர், நார்த்தாங்குடி, பாப்பாக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.
  இதில், கோவை மாநகர முன்னாள் மாவட்டச் செயலாளர் வீரகோபால் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai