சுடச்சுட

  

  திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பாள் கோயிலில் தீர்த்தவாரி

  By DIN  |   Published on : 12th February 2019 09:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பாள் சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி கோயிலில் திங்கள்கிழமை தீர்த்தவாரி நடைபெற்றது. 
  நன்னிலம் அருகேயுள்ள திருமீயச்சூர் ஸ்ரீ லலிதாம்பாள் சமேத ஸ்ரீமேகநாத சுவாமி கோயிலில் நிகழாண்டு பிரமோத்ஸவம் நடைபெற்று வருகிறது. அதன்படி, பிப்ரவரி 2-ஆம் தேதி த்வஜாரோகனத்துடன் (கொடியேற்றத்துடன்) விழா தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
  இந்நிலையில், திங்கள்கிழமை மதியம் ஸ்ரீ நடராஜ பெருமான் தீர்த்தம் கொடுத்தருளும் தீர்த்தவாரியும், மாலையில் பஞ்சமூர்த்திகள் தீர்த்தம் கொடுக்கும் தீர்த்தவாரியும் நடைபெற்றது. இந்த தீர்த்தவாரிக்காக ஸ்ரீ லலிதாம்பாள் சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி ரிஷப வாகனத்திலும், ஸ்ரீவிநாயகப் பெருமான் மூஷிக வாகனத்திலும், ஸ்ரீ சுப்ரமணிய பெருமான் மயில் வாகனத்திலும், ஸ்ரீசண்டிகேஸ்வரர் பெருமான் சிறிய ரிஷப வாகனத்திலும் காட்சியளித்தனர். 
  தீர்த்தவாரிக்குப் பின்னர் சுவாமி வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து, இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்ற பிறகு கொடியிறக்கம் நடைபெற்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai