சுடச்சுட

  

  திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மேட்டுப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் 19-ஆம் ஆண்டு ஒன்றிய பேரவை மாநாடு நடைபெற்றது.
  ஒன்றிய தலைவர் கணேஷ் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் கே.  உலகநாதன் ,  இளைஞர் பெருமன்ற மாநில தலைவர் முருகேசு ஆகியோர் பேரவை கூட்டத்தின் நோக்கம் குறித்து பேசினர். முன்னாள் ஒன்றியச் செயலர்கள் ஆர். ஞானமோகன் , பி.வி. சந்திரராமன், எம். வையாபுரி, ராஜா, பாஸ்கர், முன்னாள் ஒன்றிய தலைவர் கே.ஆர். ஜோசப் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  ஒன்றியத் தலைவர் தமிழ்ச்செல்வி, செயலர் சரவணன், துணைச் செயலர் இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், அரசு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் , கொருக்கையில் அரசு கால்நடை மருத்துவ கல்லூரி தொடங்க வேண்டும், திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதையில்  ரயில் போக்குவரத்தை உடனடியாக தொடங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai