சுடச்சுட

  

  திருவாரூர் ஸ்ரீ ஜி.ஆர்.எம். கல்வி முகவாண்மையின் முன்னாள் செயலரும், ஜி.ஆர்.எம். பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியருமான சிவ. கேதார கெளரி (73)  உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார். 
  இவர் திருமணம் ஆகாதவர். கடந்த 1982- இல் ஸ்ரீ ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்ற கேதார கெளரி  25 ஆண்டுகள் தலைமை ஆசிரியராகப் பணி புரிந்தார். இவர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்.
  பணி ஓய்வுக்குப்பிறகு 1997-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரை 11 ஆண்டுகள், ஸ்ரீ ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வ.சோ ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீ தியாகராஜா தொடக்கப் பள்ளி ஆகியவற்றின் தாளாளராகவும் இருந்துள்ளார். 
  சென்னை, வேளச்சேரியில் தனது சகோதரருடன் வசித்து வந்த கேதார கெளரி, சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் செவ்வாய்க்கிழமை காலமானார். இவரது இறுதிச் சடங்கு சென்னையில் புதன்கிழமை நடைபெறுகிறது. தொடர்புக்கு 9444417814.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai