சுடச்சுட

  

  திருவாரூரில் உள்ள இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் சாலைப் பாதுகாப்பு வார விழிப்புணர்வுக் கருத்தரங்கம் திங்கள்கிழமைநடைபெற்றது. 
  நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் எஸ். ஸ்ரீதேவி தலைமை வகித்தார். அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் என். தமிழ்க்காவலன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, சாலை விபத்துகள் ஏற்படுவதன் காரணங்களையும், அவற்றை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விளக்கிப் பேசினார்.  நிகழ்ச்சியில் ஏராளமான மாணவிகள் பங்கேற்றனர். முன்னதாக கணிதத் துறை உதவிப் பேராசிரியர் கே. நிர்மலாதேவி வரவேற்றார். கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் வெண்ணிலா நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai