சுடச்சுட

  

  திருவாரூர் அருகே பேரளம் ஸ்ரீ சங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  நன்னிலம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் ஜி. வெற்றிச் செல்வம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் நன்னிலம் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி எம். ஜெகதீசன் பங்கேற்றுப் பேசினார். 
  முகாமில் சாலைப் போக்குவரத்து விதிகள், தனிமனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான சட்ட அணுகுமுறைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்பான சட்ட விதிகள், சமூக வலைதளங்களால் உண்டாகும் பிரச்னைகள், நுகர்வோர் நீதிமன்றங்களை பயன்படுத்தும் முறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டன. 
  நிகழ்ச்சியில் அரசு வழக்குரைஞர் ஜே. வீரமணி, பள்ளியின் இயக்குநர் ஏ. சுகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai