சுடச்சுட

  

  மகளிர் கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம்

  By DIN  |   Published on : 13th February 2019 06:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மன்னார்குடி அருகேயுள்ள மேலவாசல் சதாசிவம் கதிர்காமவள்ளி மகளிர் கல்லூரியில், ஜேசிஐ மன்னை அமைப்பின் சார்பில் செவ்வாய்க்கிழமை புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
  ஜேசிஐ மன்னைத் தலைவர் எம்.வி. வேதாமுத்தமிழ்ச்செல்வம் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கை மகளிர் கல்லூரி தாளாளர் ஜி. சதாசிவம் தொடங்கி வைத்தார். 
  புற்றுநோய் ஆரம்ப கட்டத்தில் கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறை குறித்து மருத்துவர் சி. அசோக்குமார், குழந்தைகளுக்கான புற்றுநோய் மற்றும் சிகிச்சை குறித்து மருத்துவர் எஸ்.தர்மராஜ், மாறிவரும் உணவு, பழக்க வழக்கங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாசு எனும் தலைப்பில் ஜேசிஐ செனட்டர் வி. பாஸ்கர், தன்னம்பிக்கையும் சிகிச்சையும் எனும் தலைப்பில் மண்டலச் செயலர் டி.செல்வக்குமார் ஆகியோர் பேசினர்.
  இதில், கல்லூரி முதல்வர் கே. மோகனா, ஜேசிஐ முன்னாள் தலைவர் வி. ராஜேஷ், மண்டலப் பயிற்சியாளர்கள் எஸ். ராஜன், துர்காதேவி, திட்ட இயக்குநர் முகம்மது பைசல், செயலர் கே. வினோத் மற்றும் பேராசிரியர்கள், மாணவியர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai