சுடச்சுட

  

  மாவட்ட விளையாட்டுப் போட்டி: சிறப்பிடம் பெற்ற மாணவியருக்குப் பாராட்டு

  By DIN  |   Published on : 13th February 2019 06:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்று, மாநிலப் போட்டிக்குத் தேர்வு பெற்ற சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரி மாணவியருக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
   மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள், திருவாரூரில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் 21 வயதுக்குள்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். 
  மன்னார்குடி அருகே உள்ள சுந்தரக்கோட்டை செங்மலத்தாயார் மகளிர் கல்லூரியிலிருந்து 40 மாணவியர் பங்கேற்றனர். இவர்கள் கையுந்து பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, பூப்பந்து ஆகிய போட்டிகளில் பங்கேற்று, சிறப்பிடம் பெற்றனர். மேலும், இம்மாணவியரில் 16 பேர், மாநில அளவிலானப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  இதையொட்டி, இம்மாணவியரை கல்லூரித் தாளாளர் வி. திவாகரன், கல்லூரி முதல்வர் சீ. அமுதா மற்றும் பேராசிரியர்கள், சக மாணவியர் பாராட்டினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai