சுடச்சுட

  

  ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதித்து சட்டப் பேரவையில் அறிவிக்க வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 13th February 2019 06:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருக்காரவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதித்து, சட்டப் பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
  திருக்காரவாசலில், ஹைட்ரோ கார்பன் எரிவாயுத் திட்ட எதிர்ப்பு போராட்டக் குழுவின் அவசரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. போராட்டக் குழுவின் தலைவர் எஸ். தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் குழுவின் செயலாளர் எம். சுப்பையன், பொருளாளர் ப. சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
  நாடாளுமன்றம் நிறைவடைய உள்ள நிலையில், திருக்காரவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து மத்திய அரசு மௌனம் காத்து வருவதாக கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த திட்டம் குறித்து எடுத்துரைக்க மறுப்பது வேதனையளிக்கிறது என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
  தீர்மானங்கள்: தமிழக சட்டப் பேரவை கூடும் முன்னரே திருவாரூர் மாவட்ட ஆட்சியரோடு, தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் போராட்டக்களத்துக்கு வந்து கோரிக்கை குறித்து கேட்டறிந்ததின் அடிப்படையிலும், நாகை எம்எல்ஏ தமிமுன் அன்சாரி, சட்டப் பேரவையில் கோரிக்கை வைத்துள்ளதன் அடிப்படையிலும், தமிழக முதல்வர்,  திருக்காரவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு நிரந்தர தடை விதித்து, தற்போதைய சட்டப் பேரவைக் கூட்டத்தில் அறிவிக்க வேண்டும்.
   திருக்காரவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொள்கைப் பூர்வமாக கைவிடவும், நிரந்தர தடை விதிக்கவும் மறுக்கும் ஆட்சியாளர்கள் மற்றும் போராட்டத்திற்கு ஆதரவளிக்க  மறுக்கும் அரசியல் கட்சிகளுக்கு நாடாளுமன்ற தேர்தல் களத்தில் எதிர்ப்பு தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  காத்திருப்புப் போராட்டம்...
  இதற்கிடையில், 17- ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் பங்கேற்று, கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai