கல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலில் பிப்.18-இல் தேரோட்டம்

வலங்கைமான் அருகேயுள்ள திருநல்லூர் ஸ்ரீகிரிசுந்தரி அம்பாள் சமேத கல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலில் மாசிமக

வலங்கைமான் அருகேயுள்ள திருநல்லூர் ஸ்ரீகிரிசுந்தரி அம்பாள் சமேத கல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலில் மாசிமக மஹோத்ஸவ விழாவையொட்டி, பிப்ரவரி 18-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. 
திருக்கயிலாய திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்றது. இக்கோயிலில் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் அருளாசிப்படி  மாசிமக மஹோத்ஸவ விழா பிப்ரவரி 10-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, நாள்தோறும் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனையும், இரவில் சுவாமி வீதியுலாவும் நடைபெற்று வருகிறது. 
திருத்தேர்: பிப்ரவரி 18-ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் மீனலக்னத்தில் ஸ்ரீகல்யாணசுந்தரேசுவரர் திருத்தேரில் எழுந்தருளல், மதியம் 2 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், இரவு தேர் நிலைக்கு வந்த பின் ஸ்ரீசிவகாமி அம்மை சமேத நடராஜர் தேர்க்கால் பார்த்து வந்தருளல் நடைபெறவுள்ளது. 
மாசிமக தீர்த்தவாரி: பிப்ரவரி 19-ஆம் தேதி காலை பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, பகல் 12 மணிக்கு மேல் 2 மணிக்குள் ரிஷபலக்னத்தில் மாசிமக தீர்த்தவாரியும், இரவு 8.30 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா காட்சியும் நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை திருநல்லூர் ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் ஸ்ரீமத்சுவாமிநாத தம்பிரான் கட்டளை விசாரணை மற்றும் கோயில் கண்காணிப்பாளர் கோ. சுந்தரம் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com