பள்ளி மாணவர்களுக்கு வட்டார அளவிலான போட்டி

ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின்கீழ், மன்னார்குடியை அடுத்த கோட்டூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட அரசுப்

ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின்கீழ், மன்னார்குடியை அடுத்த கோட்டூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
கோட்டூர் வட்டார வளமைய அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், பெண்கல்வி மற்றும் சுத்தம், சுகாதாரம் ஆகிய கூறுகளை உள்ளடக்கிய ஓவியம், கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. இதில், சுமார் 100 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகைகள் வழங்கப்பட்டன.
நடுவர்களாக விக்கிரபாண்டியம் உயர்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் முருகையன், பாலையக்கோட்டை மேல்நிலைப்பள்ளியின் தமிழாசிரியர் க. தொல்காப்பியன், ஆசிரியர் பயிற்றுநர் தி. சந்திரசேகரன், கோ. முருகேசன் ஆகியோர் செயல்பட்டனர்.
நிகழ்ச்சிக்கு, வட்டார வளமைய மேற்பார்வையாளர் கு. ஜோதி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் உ. சிவக்குமார் போட்டியைத் தொடங்கி வைத்தார். ஆசிரியர் பயிற்றுநர் நா. சுப்ரமணியன், வட்டார ஒருங்கிணைப்பாளர்
கு. அனிதா, பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com