புயல் கணக்கெடுப்பில் குளறுபடி: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 20th February 2019 09:16 AM | Last Updated : 20th February 2019 09:16 AM | அ+அ அ- |

கஜா புயல் சேத விவரக் கணக்கெடுப்பில் ஏற்பட்ட குளறுபடிகளைக் கண்டித்து, நீடாமங்கலத்தில் விவசாயிகள் சங்கம் சார்பில் சாலை மறியல் விளக்க ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நீடாமங்கலம் வேளாண் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் கே. கலியபெருமாள் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் நடேச. தமிழார்வன் முன்னிலை வகித்தார். குளறுபடிக்கு காரணமான அதிகாரிகளைக் கண்டித்து முழக்கம் எழுப்பப்பட்டது. இதில், திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.