ஸ்ரீவாஞ்சியம் குப்த கங்கையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
By DIN | Published On : 20th February 2019 09:18 AM | Last Updated : 20th February 2019 09:18 AM | அ+அ அ- |

நன்னிலம் அருகேயுள்ள ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி கோயிலில் அமைந்துள்ள குப்த கங்கையில் செவ்வாய்க்கிழமை மாசி மாத பெளர்ணமியை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இக்கோயில் குளத்தில் மாசி மாத பெளர்ணமியின்போது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அது காசியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதை விட பன்மடங்கு பலனைக் கொடுக்கும் என்பது ஐதீகம். மேலும், பல ஆண்டுகள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தவறியவர்கள் இந்த ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ மங்களாம்பிகை சமேத ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீகுப்த கங்கையில் தர்ப்பணம் கொடுத்தால் பல ஆண்டுகள் கொடுத்தற்கு ஈடாகும். எனவே, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாசி மாத பெளர்ணமியான செவ்வாய்க்கிழமை ஸ்ரீவாஞ்சியத்தில் உள்ள குப்த கங்கையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.