திறன் வளர்ப்புப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு

திருவாரூரில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் நடைபெற்ற திறன் வளர்ப்புப் போட்டிகளில் வெற்றி பெற்ற 

திருவாரூரில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் நடைபெற்ற திறன் வளர்ப்புப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் தனித்திறனை வளர்க்கும் வகையில் பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், பெண் கல்வியின் முக்கியத்துவம், சுத்தம் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டன. 
 ஏற்கெனவே, மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில் இதேபோல் போட்டிகள் நடத்தப்பட்டு, அதிலிருந்து 3 பேர் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு திருவாரூரில் உள்ள அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட அலுவலக கூட்ட அரங்கில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசு ரூ.4500, இரண்டாம் பரிசு ரூ.4000, மூன்றாம் பரிசு ரூ.3,500 ஆகியவை காசோலையாக வழங்கப்பட்டன. இப்போட்டிகளை முதன்மைக் கல்வி அலுவலர் ந.மாரிமுத்து தொடங்கி வைத்தார். அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் உதவி ஒருங்கிணைப்பாளார் க.கலைவாணன் வாழ்த்திப் பேசினார். போட்டிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செ.பாண்டியன்  செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com